2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மதுபான நிலையத்தை அகற்றாமைக்கு காரணம் என்ன? :நகுசீன்

George   / 2014 டிசெம்பர் 16 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பெரிய கடை பகுதியில் அனுமதியின்றி இயங்கிக்கொண்டிருக்கும் மதுபான நிலையத்தை அகற்றாமைக்கு காரணம் என்ன? என மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் கேள்வி எழுப்பினார்.

மன்னார், நகர சபையின் இவ்வருடத்துக்கான இறுதிக்கூட்டம் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது. இக்கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

மன்னார் நகர சபையிடம் விற்பனை உரிமம் பெறுவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளாத நிலையில் குறித்த மதுபான விற்பனை நிலையம் ஒரு வருடமாக இயங்கி வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக தொடர்ச்சியாக எங்களிடம் முறையிட்டு வருகின்றனர்.

எனினும் மன்னார் நகர சபை, இந்த மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற இதுவரை ஏன் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் மேலும் கேள்வி எழுப்பினர்.

மன்னார் நகர சபை இவ்விடையத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த மன்னார் நகர சபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், குறித்த மதுபான விற்பனை நிலையத்துக்கு மன்னார், நகர சபை எவ்வித அனுமதியையும் வழங்கவில்லை. ஆனால் அவர்கள் ஏனைய சகல அனுமதியையும் பெற்றுள்ளனர். அப்பகுதி மக்களின் ஒற்றுமையின்மையினால் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார்.

அரசியல் செல்வாக்குடனும் பொலிஸாரின் ஆதரவுடனும் குறித்த மதுபான விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது. இதனால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .