2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் நகர சபையின் பட்ஜெட் வெற்றி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 17 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரசபையின் 2015ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டடம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகரசபை உறுப்பினர் இ.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரசபையின் 2015ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்டமானது கடந்த 3ஆம் திகதி நடை பெற்ற விசேட சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்துக்கமைய மக்கள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மக்கள் பார்வையின் போது பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களுடன், வரவு - செலவு திட்டத்தின் இறுதி வாசிப்பு கடந்த திங்கட்கிழமை 15ஆம் திகதி இடம்பெற்ற டிசம்பர் மாதத்துக்கான சபைக்கூட்டத்தில் மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தினால் முன்வைக்கப்பட்டது.

சபையின் தலைவர் உட்பட உப தலைவர், செயலாளர் மற்றும் சபையின் சகல உறுப்பினர்களும் கலந்து கொண்டு வரவு - செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இதர விடயங்கள் விவாதிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவு - செலவுத் திட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானமாக 92,195,630.00 ரூபாவும் மொத்தச் செலவீனமாக 92,193,780.00 ரூபாவும் மிகையாக 1,850.00 ரூபாய் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என நகரசபை உறுப்பினர் இ.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .