2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ரயில் மோதி நால்வர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 18 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியில்  பாதுகாப்பு அற்ற புகையிரதக்கடவையினூடாக  கடக்க முற்பட்ட  வாகனமொன்றை  புகையிரதம் மோதியதால்,  இவ்வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புதன்கிழமை (17) இரவு பயணித்த  இரவு நேர தபால் புகையிரதம், புகையிரதக்கடவையினூடாக கடக்க முற்பட்ட இந்த வாகனத்தை தூக்கி எறிந்துள்ளது.

விபத்தால் நிறுத்தப்பட்ட இந்தப் புகையிரதம்,  சிறு தாமதத்தின் பின்னர் பயணத்தை தொடர்ந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .