2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வைத்தியர் அவமதிக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, பாவக்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை ஒப்பந்தக்காரர்களும்; பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளரும் இணைந்து அவமத்தித்ததாக தெரிவித்து பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவக்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில்,

'பாவக்குளம் வைத்தியசாலையின் தற்போதைய வைத்தியர் பொறுப்பேற்றதன் பின்னர் வைத்தியசாலை சிறப்பாக இயங்கி வருகின்றது. தற்போது புதிய கட்டடங்களும் கட்டப்படுகின்றன. இந்நிலையில் ஒப்பந்தக்காரர்கள் கட்டடங்களில் விடும் பிழைகளை பிரதேசவாசிகள் என்ற வகையில் வைத்தியரிடம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இதனையடுத்து, வேலைகள் சீரில்லை என்று மக்கள் சுட்டிக்காட்டுவதாக  ஒப்பந்தக்காரர்களிடம் வைத்தியர் தெரிவித்திருந்தார். இந்த வேளையில், ஒப்பந்தக்காரர் வைத்தியரை தாக்க முற்பட்டபோது சிகிச்சைக்கு சென்றிருந்தவர்கள் அதனை தடுத்திருந்தனர்.

கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு வருகை தந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஒப்பந்தக்காரர்களுக்கு சார்பாக செயற்பட்டுள்ளார். இரவு, பகல் பாராது மக்களுக்கு சேவையாற்றும் வைத்தியரை, பாடசாலை ஆசிரியர் மாணவனை வகுப்பறைக்கு வெளியில் விடுவதுபோல் வைத்தியசாலைக்கு வெளியே விட்டு வைத்தியரின் அறையை பூட்டி அராஜகம் செய்துள்ளார்.

பிரதேசவாசிகளாகிய நாங்கள் உடனடியாக  வைத்தியசாலைக்கு வந்து, வைத்தியரை அவரது கடமையை செய்ய விடுமாறு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரை கோரியிருந்தாம். இந்நிலையில் தொடர்ந்தும்; எமது வைத்தியசாலையின் வைத்தியரை இடமாற்றம் செய்வதற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு சார்பாக செயற்படவும் அதிகாரிகள் முனைகின்றர். அதனை கண்டித்Nது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம்' என தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 'மக்களுக்காக பணி செய்யும் வைத்தியரை இடமாற்றம் செய்யாதே', 'மூவின மக்களுக்கும் சேவை செய்யும் வைத்தியரை அவமானப்படுத்தாதே', 'ஒப்பந்தக்காரரே உங்கள் பணியை சீராக செய்யுங்கள்', 'சுகாதார அமைச்சரே வைத்தியசாலையை தரம் உயர்த்து' என்ற வாசங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள்  தாங்கியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .