2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் பெண் தேர்தல் அதிகாரிகள்

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தில் முதல்முறையாக தலைமை தாங்கும் பெண் சிரேஸ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சகருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன் திங்கட்கிழமை (22) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் கடமைகளை ஆண் அலுவலர்கள் மட்டுமே அதிகளவில் நியமிக்கப்படுவது வழமையாகவிருந்தது. இருந்தும், தற்போது அரச அலுவலகங்களில் பெண் அலுவலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, சிரேஸ்ட தெரிவத்தாட்சி அலுவலராக பெண் அலுவலர்கள் அதிகளவில் நியமிக்கப்படவுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 95 வாக்களிப்பு நிலையங்களில் அதிகளவான நிலையங்களில் பெண்கள், சிரேஸ்ட தெரிவித்தாட்சி அலுவலராக நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .