Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னகர் கிராமத்திலுள்ள 10 வீடுகளுக்குள் திங்கட்கிழமை (22) அதிகாலை வெள்ளநீர் புகுந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் திங்கட்கிழமை (22) அதிகாலை 5 மணி தொடக்கம் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால், தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
பொன்னகர் பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டதாக பிரதேச செயலகத்துக்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையால் இரணைமடுக்குளத்தின் 10 வான் கதவுகளையும் 8 அங்குலம் வரையில் திறந்துவிட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
5 hours ago