Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kanagaraj / 2014 டிசெம்பர் 24 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் செவ்வாய்க்கிழமை (23) நேரில் சென்று பார்வையிட்டனர்.
மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை கடலுக்கு கொண்டுசெல்லும் உடனடி வேலைத்திட்டத்தினை மன்னார் நகர சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வேலைத்திட்டங்களையும் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கூடாக அனர்த்த முகாமைத்துவ மையத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதேவேளை, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜிம்ரோன் நகர் கிராம மக்கள் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவுமற்ற பாலர் பாடசாலையில் தங்கியுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் வரை அங்கு தங்கியுள்ளனர்.
இங்கு மலசலகூட வசதிகள் இல்லாமையினால் தாம் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக இந்த மக்கள் மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச செயலகத்தினால் தமக்கு வழங்கப்பட்டுவரும் உலர் உணவுப்பொருட்கள் தாமதித்தே வழங்கப்படுவதாகவும் இதனால் குழந்தைகள் முதல் அனைவரும் மாலை 3 மணிக்கு பின்பே மதிய உணவு உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் மாகாண சபை உறுப்பினரிடம் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
4 hours ago