2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சுண்டிக்குளம் தொடுவாய் உடைக்கப்பட்டது

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இரணைமடு குளத்திலிருந்து வான் பாயும் நீர், தாழ் நிலங்களில் தேங்காமல் கடலுக்கு செல்லும் பொருட்டு சுண்டிக்குளம் தொடுவாய் (நன்னீர் சேகரிப்பு அணைக்கட்டு) பகுதி ஞாயிற்றுக்கிழமை (28) காலை உடைக்கப்பட்டு நீர் கடலுக்கு விடப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 31 அடிக்கு அதிகமாக நிரம்பியதை அடுத்து, 10 வான் கதவுகளும் 8 அங்குலம் அளவுக்கு கடந்த 22ஆம் திகதி திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கிளிநொச்சியில் மழை பெய்து வருவதால் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து செல்வதால் வான் கதவுகள் 3 அடிக்கு திறந்து விடப்பட்டன.

வான் பாயும் நீர் தாழ்நிலப் பிரதேசங்களில் தேங்கி நின்று வெள்ளப்பாதிப்புக்களை ஏற்படுத்தியதை அடுத்து, நீரை கடலுக்கு செல்லும் பொருட்டு சுண்டிக்குளம் பகுதியில் போடப்பட்ட தொடுவாய் உடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தாழ் நிலங்களில் நீர் தேங்கி நிற்பது குறைவடைந்து வருகின்றது.

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் 2 மணிக்கு 31 அடி 9 அங்குலமாக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .