2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


மழை காரணமாக பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்களையும் வடமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (28) வழங்கியது.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடமாகாண சபையால் மாவட்டம் தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் முதற்கட்டமாக புதியவேலர் சின்னக்குளம், வேடர்மகிழங்குளம், விளக்குவைத்தகுளம், மாதர் மாணிக்கர் மகிழங்குளம், கொந்தக்காரன்குளம், கதிரவேலர் பூவரசன்குளம், ஓமந்தை, அரசன்குளம் ஆகிய இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தின் ஏனைய இடங்களில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கும் உதவிகள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராசா, இ.இந்திரராசா ஆகியோர் இணைந்து இந்த நிவாரண விநியோகத்தை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .