2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மன்னார் ஆயர்- மைத்திரிபால சந்திப்பு

Thipaan   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகையை  செவ்வாய்க்கிழமை (30) மதியம் சந்தித்து கலந்துரையாடியாதோடு ஆயரின் ஆசியையும் பெற்றுக்கொண்டார்.

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்ற பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் முடிவடைந்த நிலையில், மன்னார் ஆயரை ஆயர் இல்லததுக்குச் சென்று சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக மற்றும் மன்னார் மறைமாவட்ட மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளி அடிகளார் உற்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.



 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .