Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது இளைஞர் மத்திய நிலையமாக வள்ளுவர்புரம் இளைஞர் மத்திய நிலையம், புதன்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வி.வில்வராஜா, சிறுவர் நிதியத்தின் முல்லைத்தீவு மாவட்டப் பணிப்பாளர் திருமதி ஊ.செந்தில்குமரன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்து வைத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் சிறுவர் நிதியமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்ற 'வலுவான செயற்றிறன் மிக்க இளைஞர் உருவாக்கம்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், 10 இளைஞர் மத்திய நிலையங்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வள்ளுவர்புரம் சமாதான நண்பர்கள் இளைஞர் கழகத்தின் பராமரிப்பின் கீழ், இந்த இளைஞர் மத்திய நிலையம் இயங்கவுள்ளது.
கிராமப் புறங்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை ஊக்குவிப்பு செயற்பாடுகளை இந்த இளைஞர் மத்திய நிலையங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago