2025 ஜூலை 10, வியாழக்கிழமை

வலைகளின் உரிமையாளர்கள் திணைக்களத்துடன் தொடர்புகொள்ளவும்

George   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

கிளிநொச்சி, கிளாலி கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட, தடை செய்யப்பட்ட வலைகளின் உரிமையாளர்களை கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்துடன் தொடர்புகொள்ளுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், புதன்கிழமை(08) பணித்துள்ளதாக திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

திணைக்கள அதிகாரிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை(07) கிளாலி கடற்பரப்பில் நடத்தப்பட்ட சோதனையின்போது தடை செய்யப்பட்ட தங்குகூசி, கூட்டு வலைகளையும் அதன்முலம்; பிடிக்கப்பட்ட மீன்களையும் கைப்பற்றினர்.

அப்;போது, அங்கு சென்ற சுமார் 100 மீனவர்கள், அந்த வலைகள் தடை செய்யப்படவில்லையெனவும் அவற்றை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். 

பூநகரி பொலிஸார் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு மீனவர்களை அப்புறப்படுத்தி கைப்பற்றப்பட்ட பொருட்கள் திணைக்களத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கைப்பற்றப்பட்ட வலைகள் சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானது.

கைப்பற்றப்பட்டவற்றை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, மீன்களை அழிக்குமாறும் வலைகளின் உரிமையாளர்கள் நீரியல் திணைக்களத்துடன் தொடர்புகொள்ளும் வகையில், இதற்கான விளம்பர அறிவித்தலை வெளியிடுமாறும் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .