2025 ஜூலை 10, வியாழக்கிழமை

2 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்பு

George   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை வியாழக்கிழமை(09) கைப்பற்றியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர்.

பொலிஸார் துரத்துவதைக் கண்டதும் டிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு வாகன சாரதி தப்பி ஓடிவிட்டார்;.

முல்லைத்தீவு கோட்டை கட்டிய குளம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி வெட்டி வரப்பட்ட முதிரை மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

வாகனமும், மரக்குற்றிகளும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதுடன், தப்பியோடிய சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .