Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலியான ஜேர்மன் கடவுச்சீட்டை பயன்படுத்தி சிங்கபூரிலிருந்து பிரான்ஸ்க்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர் வவுனியாவைச்சேர்ந்த 31 வயதானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர், இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.308 என்ற விமானத்தின் ஊடாக கடந்த 8 ஆம் திகதி, சிங்கபூருக்கு சென்றுள்ளார். அதற்காக செல்லுபடியான கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சிங்பூரில் வைத்து முகவரிடமிருந்து போலியான கடவுச்சீட்டை பெற்று. அங்கிருந்து பிரான்ஸ்க்கு செல்வதற்காக முகவருக்கு 10 இலட்சம் ரூபாய் கொடுத்து போலியான ஆவணங்களை பெற்றுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
54 minute ago
1 hours ago