2025 ஜூலை 10, வியாழக்கிழமை

புதிய கட்டடங்கள் திறந்து வைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

வவுனியா சிற்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் வித்தியாலயத்தில் 1 கோடி 60 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி பாடசாலை கட்டடம், சவூதி அரேபியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிறுவனம் என்பனவற்றின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கான பள்ளிவாசல் என்பன  வெள்ளிக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன், சவூதி நாட்டு பிரதி நிதிகள், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட பலரும் இந்த திறப்பு விழாவில் கலந்து  கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .