2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கர்ப்பிணி தாய்மாருக்கு பால்மா பொதிகள் வழங்கும் வைபவம்

Thipaan   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்கால சந்ததியை போஷாக்குள்ள சமூகமாக உருவாக்கும் நோக்கில், கர்ப்பிணி தாய்மாருக்கு பால்மா பொதிகள்    வழங்கும் வைபவம் அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், வெள்ளிக்கிழமை (24)   நடைபெற்றது.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மாருக்கு முதற்கட்டமாக இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஒஸ்மன் டெனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை, வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்  ஆரம்பித்து வைத்தார்.

எதிர்கால சந்ததியை போஷாக்கு நிறைந்த சமூகமாக உருவாக்க வேண்டும் என்பதை இலக்காகக்கொண்டே மேற்படி விழிப்பூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .