Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 05 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தினம் மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், சிறப்பு விருந்தினராக வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி அன்ரன் சிசில், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மன்னார் மாவட்டத்தில் குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள நால்வர் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
பல வருட இடைவெளியின் பின் குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர் தினம் வடமாகாணத்தை ஒன்றினைத்து மன்னாரில் நடாத்தப்படுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடபத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago