Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
George / 2015 மே 06 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2,788 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக பிரதேச செயலகங்களின் தகவல் தெரிவிக்கின்றன.
யுத்தம் மற்றும் இயற்கை இழப்புக்கள் காரணமாக இரண்டாயிரத்து 338 குடும்பங்கள் கணவனை இழந்த நிலையில் உள்ளதுடன் கணவனை பிரிந்த நிலையில் 450 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
19 கிராமஅலுவலர் பிரிவுகளைக் கொண்ட புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவில் 12,094 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் கணவனை இழந்த 1,451 பெண்கள் இருக்கின்றனர்.
இவர்களில் 289 பேர் இளம் விதவைகள் ஆவர். இதனைவிட குடும்பப் பிணக்குகள் மற்றும் ஏனைய காரணங்களால் கணவனை பிரிந்த நிலையில் 312 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன.
27 கிராமஅலுவலர் பிரிவுகளைக் கொண்டு ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் கணவனை இழந்த 887 பெண்களும், கணவனை பிரிந்த நிலையிழல் 138 பெண்களும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக உள்ளன.
இந்தக் குடும்பங்களின் தங்கிவாழ்வோரின் தேவைகளை இந்தப் பெண்களால் பூர்த்தி செய்யமுடியாத காரணத்தால் அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளனர். இந்தக் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், போசாக்கு என்பன அத்தியாவசியமாக கவனிக்கப்படவேண்டும்.
இதற்காக இந்தக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் தேவையாகவுள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு உதவிகள் கிடைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago