Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 06 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வட மாகாணசபையின் தலைமை அலுவலகத்தை மாங்குளத்தில் நிறுவ வேண்டும் என வட மாகாணசபையின் இறுதி அமர்வில் பிரேரணை நிறைவேற்றியுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் இன்று (6) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஐந்து மாவட்டங்களை தன்னகத்தே கொண்ட வட மாகாணசபையானது தனது சேவையை சகலருக்கும் சமமாக வழங்கும் வகையில் செயற்பட வேண்டுமாயின், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு மத்தியில் அமைந்திருக்க கூடிய மாங்குளத்துக்கு அலுவலகத்தை மாற்றுவது சாலச்சிறந்ததாகும்.
பாரிய நீர்வளமும் நிலவளமும் கொண்ட மாங்குள பிரதேசம், யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனை வளம்மிக்க பூமியாக மாற்றவேண்டுமாயின் வட மாகாணசபையின் தலைமையகத்தை மாங்குளத்திற்கு மாற்றுவதே சிறந்ததாகும்.
இவ்விடயத்தை மாந்தை கிழக்கு பிரதேசசபையும் தீர்மானம் எடுத்து நிறைவேற்றியுள்ளது. அதேவேளை, மாங்குளம் மக்கள் 200 பேர் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் முதலமைச்சரிடம் கையளித்துள்ளனர்.
இதற்கும் மேலாக முதலமைச்சர் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டபோது மாங்குளத்திற்கு தலைமையகத்தை மாற்றுவேன் என அம்மக்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.
எனவே, இவ்விடயத்தை வட மாகாணசபையில் பிரேரணையாக கொண்டு வந்திருந்தேன். அதனை உறுப்பினர்கள் அமோதித்ததன் அடிப்படையில் அப்பிரேரனை நிறைவேறியது என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .