Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 மே 10 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வட மாகாணசபையில் புதிதாக பதவியேற்றுள்ள புதிய வடமாகாணசபை உறுப்பினர் நடராஜ்யை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(10) இடம்பெற்றது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் போனஸ் ஆசன உறுப்பினராக சுழற்சி முறையில் இரண்டாவது வருடத்துக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நடராஜ், உட்பட அதிதிகள் மங்கள இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு உரைகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், இந்திய துணைத்தூதுவர் டி.மூர்த்தி, வட மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலளார் சி.பாஸ்கரா, மாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ஜி.டி.லிங்கநாதன், எம்.தியாகராசா, க.சிவனேசன், சி.சிவமோகன், சர்வேஸ்வரன், இ.தொ.கா வன்னி அமைப்பாளர் கஸ்.கோவிந்தராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரன், முன்னாள் உப நகரபிதா சந்திரகுலசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
27 minute ago