Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மே 10 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
ஒரு அரசாங்க அதிபரை மாற்ற முடியாத கட்சித்தலைவர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றவர்கள் எவ்வாறு தமிழர்களுக்கு தீர்வை பெற்று தரப்போகின்றார்கள் என்று வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட எம்.பி. நடராஜாவின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வட மாகாணசபை கடந்த காலங்களில் இயங்க முடியாமல் இருந்தமைக்கு காரணம், முன்னைய அரசு மற்றும் ஆளுனர் உட்பட பிரதம செயளலாருமாக இருந்தனர்.
ஆனால் தற்போது ஆளுனர் உட்பட பிரதம செயலாளார் மாற்றப்பட்டு விட்டது. இதன் காரணமாக தற்போது நான் உட்பட வட மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் இனி மேடை சரியில்லை என கூற முடியாது. ஆகவே மிகுதிக்காலங்களை நாம் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்யவேண்டும்.
தமிழரசுக்கட்சியின் தலைவருக்கும் நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவேண்டும். மாகாணசபை என்பது எமது இனப்பிரச்சனைக்கான ஒரேயொரு உத்தியோகபூர்வமான பதிவு.
ஆனால் அதை செய்வதற்கு மத்திய அரசு இணங்காவிட்டாலும் கூட மக்களின் தேவைகளை இனங்கண்டு செய்யவேண்டிய சட்ட ரீதியான தார்ப்பரியங்கள் எங்களது மாகாணசபைக்கு எவ்வளவோ உள்ளது. அதை இல்லை என்று சொல்ல முடியாது. எதற்கு எடுத்தாலும் காரணம் காட்டி நிற்க முடியாது.
இந்திய அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட 5,000 வீடுகளில் விகிதாசாரத்தின் படி பார்த்தால் எங்களுடைய தமிழ் மக்களை விட ஏனைய இனத்தவர்களுக்கு அதிகமாகவே சென்றுள்ளது.
வவுனியா தமிழ் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பழைய கற்பகபுரம், கந்தன்குளம், பொன்னாவரசன்குளம், அரசன்குளம், மருதன்குளம் இது போன்ற பல கிராமங்கள் 2009ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட அதே தகரத்துடன் தற்போதும் மலசலகூடம் கூட இல்லாமல் இருக்கின்றார்கள்.
ஆகவே, இந்த மக்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் செய்யவேண்டும். இல்லையேல் எமக்கு வாக்களித்த மக்களிடம் நாம் திரும்பவும் போகமுடியாது என்பதே உண்மை.
நல்லிணக்க அரசு நல்லதொரு மாற்றம் என்பது உண்மையாக இருக்கலாம். ஜனசாயக ரீதியாக துணிந்து நாம் கதைக்ககூடிய நிலையை, இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாக இருந்தாலும் 19ஆவது திருத்த சட்டத்தில் எங்களைப்பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை என்பது தமிழ் மக்களை பொறுத்தவரை மிகப்பெரிய கவலையாகும்.
எழுத்து மூலமாக இல்லாவிட்டாலும் வாய் மூலமாகவேனும் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது தற்போதுள்ள தேசிய அரசாங்கமாவது ஒரு வசனம் கூட எமக்கு திருப்திபடுத்துவதற்காக கூட சொல்லவில்லை.
இந்நிலையில் சிறிதுகாலத்துக்கு இந்த அரசை விட்டு பிடிக்கலாம் என்ற அன்புக்கட்டளைகளோ அல்லது கட்டளைகளோ தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளால் எமக்கு வந்துகொண்டிருநக்கின்றது.
ஆனால் ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குற்றவாளியாக காணப்பட்ட சரத்பொன்சேகாவுக்கு ஒரேநாளில் பீல்ட் மாஸ்டர் பட்டம் வழங்கமுடியுமானால், குற்றவாளியாக காணப்பட்ட பிரதம நீதியரசர் ஒரே இரவில் மீண்டும் பிரதம நீதியரசர் ஆக முடியுமானால், காணாமல் போனோர் தொடர்பிலோ ஒட்டுமொத்த காணிகளை விடுவிப்பது தொடர்பாகவோ நல்லதொரு சமிக்ஞையை புதிய அரசு காட்டவில்லை என்பதே எமது கவலை.
இதற்குமப்பால் வவுனியா அரசாங்க அதிபர் மக்கள் பிரதிநிதிகளை மதிக்காத தன்மை காணப்படுகின்றது. கற்களம் மக்களின் ஆர்ப்பாட்டத்தின்போது வவுனியா அரசாங்க அதிபர் என்னுடன் மிகமோசமாக நடந்துகொண்டார்.
இது தொடர்பாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட ஒரு அமைச்சருமாக கையெழுத்து வைத்து ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர மாகாணசபையில் விசேட கவனயீர்ப்பு பிரேரனையை வட மாகாண சுகாதார அமைச்சரும் இவ்விடயம் தொடர்பாக கொண்டு வந்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக இதுவரை ஒன்றுமே நடக்கவில்லை.
அங்கு கலந்துகொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சியின் தலைவர்களாக உள்ள மாவை சேனாதிராஜா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு ஒரு அரசாங்க அதிபரை மாற்ற முடியாது என்றால் எப்படி எங்களது பிரச்சனையை தீர்க்கபோகின்றீர்கள்.
அரசாங்க அதிபரை மாற்றுவது எதற்காக என்றால் 2009ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் கிடைக்காமல் எமது மக்கள் தகரத்துடன் இருப்பதற்கு முக்கிய காரணம் வவுனியா அரசாங்க அதிபரே. இந்த மக்களுக்காக எந்த ஒரு வேலைத்திட்டத்தையும் அவர் செய்யவில்லை.
அண்மையில் அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டு வரப்பட்ட 5,000 குடும்பங்களை கலாபோகஸ்வௌ என்ற கொக்கச்சாங்குளத்தில் குடியேற்றியுள்ளனர். அங்கு இராணுவமும் ஒரு அரசியல்வாதியும் அரசாங்க அதிபரும் மாத்திரமே செல்ல முடியும். வேறு ஒருவரும் செல்ல முடியாது. அங்குள்ள சிங்களவர்களை கோழிக்குஞ்சு வளர்ப்பதை போன்று வளர்க்கின்றனர்.
ஏனெனில் அடுத்த தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சமப்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது. ஆகவே இங்கு இவ்வாறான பல விடயங்கள் இடம்பெறுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித்தலைவர்கள் என்ற பதவியில் இருந்துகொண்டு செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுங்கள் நாங்கள் வீதியில் இறங்குகின்றோம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
14 minute ago
23 minute ago