2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் பொதுநூலகம் வேண்டும்

Gavitha   / 2015 மே 11 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு நகரத்தில் பொது நூலகமொன்றை அமைத்துத் தருமாறு முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நகரத்தில் சிறந்த நூல் நிலையம் இல்லாததன் காரணமாக மாணவர்கள்; பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகரத்தில் பிரதேச சபை அமைந்துள்ள பகுதியில் நூலகம் அமைக்கக்கூடிய காணியுள்ளது. இக்காணியில் நூலகமொன்றை சிறந்த முறையில் அமைப்பதன் ஊடாக மாணவர்களும் மக்களும் நல்ல பயனையடைந்து கொள்ள முடியுமெனவும் நகர அபிவிருத்திக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .