2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் தொடர் மழை: தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள் அவதி

Thipaan   / 2015 மே 12 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக நண்பகலுக்கு பின்னர் பெய்து வரும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற குடும்பங்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒரு வருடத்துக்கு பயன்படக்கூடிய அளவில் பல குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

அந்த வீடுகளிலேயே மக்கள் தற்போதும் வாழ்கின்றனர். தற்போது பெய்யும் மழையால் அந்த வீடுகளில் வசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்திய வீட்டுத்திட்டம், புள்ளித் திட்ட அடிப்படையில் வழங்கப்பட்டமையால், 2, 3 அங்கத்தவர்களைக் கொண்ட வறிய குடும்பங்கள் இந்த வீடுகளைப் பெறவில்லை.

இதனால் அந்தக் குடும்பங்கள் தற்காலிக கொட்டகைகளில் மிகவும் அவதியுற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .