Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 மே 12 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் சோலைக்காட்டுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு கசிப்பு உற்பத்தியே காரணம் என கிளிநொச்சி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எட்மன் மகேந்திரன், செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
வன்னேரிக்குளம் சோலைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நா.பரமேஸ்வரன் (வயது 48) என்பவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு சந்தேகநபர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினோம்.
இந்தக் கொலை தொடர்பில் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் இதற்கு முழுமையான காரணம் கசிப்பு உற்பத்தியே என்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டவரும் பிறிதொரு நபரும் இணைந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவருக்கு பங்காளியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பும் இருந்துள்ளது.
இதன் விளைவாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத உற்பத்திகள் மூலம் கிளிநொச்சியில் குற்றச் செயல்கள், கொலைகள், குடும்பப் பிணக்குகள் அதிகரித்துள்ளன.
இவற்றைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவை செயற்படுத்துகின்றோம். கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்களை அடையாளப்படுத்த மோப்ப நாய்களைப் பயன்படுத்துகின்றோம்.
சுண்டிக்குளம், பிரமந்தனாறு பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளுக்கும் சட்டவிரோத மதுபான உற்பத்திகளே காரணம். மக்களிடையே இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago