2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆலய அபிவிருத்திக்கு உதவுவதாக இந்திய துணைத்தூதர் உறுதியளிப்பு

Kogilavani   / 2015 மே 12 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய அபிவிருத்திக்கு தம்மாலான உதவிகளை வழங்குவதற்கு ஆவண செய்வதாக இந்திய துணைத்தூதர் நட்ராஜ் உறுதியளித்துள்ளார்.

இந்திய துணைத்தூதர் நடராஜ் தலைமையிலான குழு, வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு நேற்று திங்கட்கிழமை (11) விஜயம்செய்துள்ளனர்.

ஆலயபரிபாலன சபையினரின் வேண்டுகோளுக்கிணங்க, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

ஆலயத்துக்கு விஜயம்செய்த குழுவினர் ஆலயத்தில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளை பார்வையிட்டதுடன் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஆலய அபிவிருத்தி தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் இந்திய துணைத்தூதகரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

'வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயமானது கடந்து யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஆலயத்தின் புனரமைப்புக்கு இந்திய அரசின் உதவியையும் ஆலோசனையையும் எதிர்பார்க்கின்றோம். ஆலயத்தை சூழவுள்ள ஒரு மைல் சுற்றளவு பகுதியை புனிதப்பிரதேசமாக பிரகடணப்படுத்த வேண்டும்' என வேண்டுகோள்விடுத்தனர்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், இந்திய துணைத்தூதர் நடராஜ், ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .