2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்- முல்லைத்தீவு அரச அதிபர் சந்திப்பு

Thipaan   / 2015 மே 12 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றதாக ஹிஜ்ராபுரம் மீனவர் சங்கத்தின் தலைவர் முத்து முஹம்மது லாபிர் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

இந்தச்சந்திப்பில் முல்லைத்தீவைச் சேர்ந்த நான்கு மீனவச்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் மற்றும் இறால் பிடிக்கும் மீனவர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், மீனவர்கள் சார்பில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் ஒரு சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தோம்.

நந்திக்கடல் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வள்ளங்களை அப்புறப்படுத்துவது, நந்திக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது, தடைசெய்யப்பட்ட வலைகளைப்பயன்டுத்துவோரை பொலிஸாரின் உதவியுடன் பிடிப்பதற்குரிய அதிகாரத்தை தெரிவு செய்யப்படும் மீனவச் சங்கங்களுக்கு வழங்குவது, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்யும் மீனவர்களை பிடிப்பதற்கு பயன்படுத்த இயங்திரத்துடன் படகு வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கோரி;க்கைகள் முன்வைக்கப்பட்டன.

குறித்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மாவட்ட செயலாளர், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தான் உரிய கவனம் செலுத்துவதுடன், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார் என லாபிர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .