Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2015 மே 12 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில், இரணைமடு இராணுவ முகாம் சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 52 பேருக்கான உளசமூக செயலமர்வு, செவ்வாய்க்கிழமை (12) இரணைமடு இராணுவ சிவில் அலுவலகத்தில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி எஸ்.தர்ஷனன், கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர் இ.செந்தூரன், மாவட்ட உளவள அதிகாரி தே.துஸ்யந்தன், சட்ட உதவி ஆணைக்குழு உத்தியோகத்தர் சட்டத்தரணி எஸ்.பிரசாந்தன் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
குடும்பம் ஒன்றின் தேவைகள், நலன்கள், குடும்பத்திலுள்ளவர்களின் போசாக்கை எவ்வாறு பேணுதல், அதிலும் குறிப்பாக பெண்களின் போசாக்கை எவ்வாறு பேணுதல், சிறுவர் துஸ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாத்தல், அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுதல், மனித உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை மனித நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago