2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பின்தங்கிய கிராமங்களுக்கு இ.போ.ச. பஸ் சேவை

Princiya Dixci   / 2015 மே 12 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்தங்கிய மூன்று கிராமங்களுக்கு இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் போக்குவரத்து சேவையை ஞாயிற்றுக்கிழமை (10) காலை முதல் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் ஜமால்தீன் ரிசாம், செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.
 
முல்லைத்தீவிலிருந்து தண்ணீரூற்று, முறிப்பு ஊடாக குமுழமுனைக்கும் முல்லைத்தீவிலிருந்து ஒட்டுசுட்டான் ஊடாக முத்தையன்கட்டு பிரதேசத்துக்கும் முல்லைததீவிலிருந்து அம்பளம் பொக்கன ஊடாக மாத்தளன் வரை குறித்த பஸ் போக்குவரத்து சேவை இடம்பெறகின்றது.
 
அண்மையில் குறித்த கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்கின் முயற்சியால் இந்த பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
பாடசாலை செல்லும் மாணவர்கள் இதனால் கூடுதல் நன்மை அடைவதுடன், பொதுமக்கள் தமது தேவைகள் நிமித்தம் பயணங்களை இலகுவாக மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .