2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அனந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 மே 12 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு – ஓட்டுசுட்டான் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம், காணாமற்போனோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் மூலமே தங்களின் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் எனவும், அதற்கான பதிலை அனந்தி வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிநின்றனர். முல்லைத்தீவு கோப்பாபிளவு பகுதியை சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

அனந்தி மற்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .