2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மன்னார் குஞ்சுக்குளம் தொங்குபாலம் சேதம்

Sudharshini   / 2015 மே 13 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்

மன்னார் குஞ்சுக்குளம் தொங்குபாலம் சேதமடைந்துள்ளமையால் அதனூடாக பயணம் செய்யும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சிரமத்தின் மத்தியிலே பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குஞ்சுக்குளம் கிராமத்துக்கான பிரதான தரைவழிப்பாதையில் வெள்ளம் நிரப்பி காணப்படுவதால், கிராம மக்கள் வேறுவழியின்றி சேதமடைந்துள்ள தொங்குபாலத்தையே தமது போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

மல்வத்துஓயா ஆற்றுநீர் பெருக்கெடுத்துள்ளமையால் நடைபெற்றுக்கொண்டிருந்த புதிய கொங்கிறீட் பாலத்தை அமைக்கும் கட்டுமானப்பணிகளும் தாமதமடைந்துள்ளன. இதனால் மக்கள் இந்த தொங்கு பாலத்தின் வழியாகவே தமது பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குஞ்சுக்குளம் கிராமமானது பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கிராமம் ஆகும். வருடாவருடம் மல்வத்துஓயா பெருக்கெடுப்பதனால் இக்கிராமத்துக்கான போக்குவரத்து பாதி;ப்படைவதோடு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்வதில்; பெரிதும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு இறுதில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உலங்குவானூர்திகள் மூலமாக இக்கிராம மக்களுக்கு உணவுகள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .