2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மன்னார்- சிலாபத்துறை வீதியூடான போக்குரத்து ஸ்தம்பிதம்

Thipaan   / 2015 மே 13 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கல்லாறு பெறுக்கெடுத்து வீதிக்கு குறுக்காக பாய்வதால் மன்னாரில் இருந்து சிலாபத்துறையூடாக புத்தளம் செல்லும் பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் இன்று புதன்கிழமை(13) காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாகவும் குறிப்பாக தென்பகுதியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவும் அப்பகுதியில் உள்ள வெள்ள நீர் கல்லாற்றில் கலக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆறு பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், மன்னாரில் இருந்து சிலாபத்துறை வீதியூடான சகல போக்குவரத்துக்களும் காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியாத நிலையில் காத்து நிற்கின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .