2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மின்சாரம் வேண்டி கவனயீர்ப்புப் போராட்டம்

Menaka Mookandi   / 2015 மே 14 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்புமாவெளி, தூண்டாய் வடக்கு கிராம மக்கள் தங்கள் கிராமத்துக்கான மின்சார வசதி சழங்கப்படவேண்டும் எனக்கோரி புதன்கிழமை (13) கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தங்கள் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை, வீதிகள் புனரமைக்கப்படவில்லை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் செய்யப்பட்டது.

முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .