2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடமைக்கு இடையூறு விளைவித்த 4 மீனவர்கள் கைது

Princiya Dixci   / 2015 மே 14 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கடற்றொழில் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலக ஊழியர்களின் கடமைக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் புதன்கிழமை மாலை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை பிடிப்பதற்காக குறித்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நந்திக்கடலோரத்தில் கடமையை மேற்கொள்ள வந்துள்ளனர்.

இதன்போது குறித்த குழுவினரை சுற்றிவளைத்த நான்கு பேர் கொண்ட மீனவனர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இதுபற்றி கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முள்ளியவளை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த நான்கு பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .