2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கடலட்டை பிடியால் வாழ்வாதாரம் பாதிப்பு

Menaka Mookandi   / 2015 மே 14 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டை, சங்கு ஆகியன பிடிக்கப்படுவதால் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளதாக புதுமாத்தளன் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் வியாழக்கிழமை (14) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

எமது கடற்றொழிலாளர் சங்கத்தில் 179 கடற்றொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் தற்போது தொழில் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.

கடலட்டை, சங்கு பிடிப்பவர்களினால் எங்கள் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. 18 கடல் மைல் தொலைவிலேயே கடலட்டை, சங்கு பிடிக்க முடியும். ஆனால் அவர்கள் கரையில் வெளிச்சம் பாய்;ச்சி பிடிக்கின்றனர்.

கடலட்டை, சங்கு பிடிப்பதற்கு அனுமதியில்லாத நிலையில் அரசியல் செல்வாக்கு மூலம் அனுமதி; பெற்றுப் பிடிக்கின்றனர். தூரமாகச் சென்று நாங்கள் மீன்களைப் பிடிக்க முடியாது. அங்கு இந்திய றோலர்களின் அத்துமீறல் காணப்படுகின்றது.

ஒவ்வொரு கடற்றொழிலாளியும் தலா 6 இலட்சம் பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களை வைத்திருந்து தொழில் செய்ய முடியாமல் இருக்கின்றனர். தங்களின் சொந்த தேவைக்குக்கூட மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .