2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வியாபார முகாமைத்துவ இளமானி கற்கைநெறி ஆரம்பம்

Thipaan   / 2015 மே 14 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினால் வியாபார முகாமைத்துவ இளமானி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வியாபார கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அம்பலம் புஸ்பநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

2014ஃ2015 கல்வி ஆண்டில் வியாபார முகாமைத்துவ இளமானி கற்கைநெறி (செயற்திட்ட முகாமைத்துவம்) எனும் புதிய கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக்கற்கை நெறியானது விசேட அனுமதியின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதால் 2014ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் சித்தியெய்திய அனைத்துப்பிரிவு  மாணவர்களும் (கலை, வர்த்தகம், விஞ்ஞானம், மற்றும் கணிதம்) விண்ணப்பிக்கலாம்.

இதற்கான மேலதிக விவரங்களினை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள மாணவர்களுக்கான கையேட்டின் மூலம் அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .