Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2015 மே 14 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் திட்;ட மக்களுக்கான காணிகளை வழங்கும் நடமாடும் சேவை, வியாழக்கிழமை (14) நடைபெற்றது.
புன்னை நீராவி நாதன் திட்டத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கான காணி ஆவணங்கள் வழங்கப்படாமையால், இவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது தற்காலிக வீடுகளிலேயே மீள்குடியேற்றத்தின் பின்னரான கடந்த 5 ஆண்டுகளும் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கான காணி ஆவணங்கள் வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட கண்டாவளை பிரதேச செயலாளர் டி.முகுந்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
புன்னைநீராவி நாதன் திட்டத்தில் வாழ்ந்து வரும் 262 குடும்பங்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று வழங்குகின்ற காணி குடியிருப்பு காணி ஆகும். வாழ்கின்ற அதேயிடத்தில் ஒரு குடும்பத்துக்கு ½ ஏக்கர் காணி வழங்கப்பட உள்ளது.
262 குடும்பங்களில் தகுதியானவர்களுக்கு காணிகள் வழங்கப்படுகின்;றது.
இவர்கள் வாழ்கின்ற இந்த பகுதி மத்திய வகுப்புத்திட்டத்துக்கு உட்பட்ட பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்த காணிகளை இவர்களுக்கு வழங்குவது தடையாக இருந்தது.
தற்போது காணி ஆவணங்கள், காணி ஆணையாளர் நாயகத்தின் பரிசீலனைக்கு அமைய சரிபார்த்த போது குறித்த 262 குடும்பங்கள் வாழ்க்கின்ற பகுதி மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணியாகவும் அது வழங்கப்பட்டதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இந்தக் காணிகள் ஏற்கனவே மத்திய வகுப்புத்திட்டத்தினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வழங்கப்படவில்லை. காணி ஆணையாளரின் சிபாரிசின் படி அரச காணிகளாக இவை காணப்பட்டு இவை மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
காணிகள் வழங்குவதன் மூலம் வீட்டுத்திட்டங்களோ அல்லது ஏனைய சலுகைகள் வழங்குவதிலோ தடைகள் இருக்காது எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
40 minute ago
47 minute ago