2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அல்லிராணிக்கோட்டைக்கு தடுப்புச்சுவர்

Suganthini Ratnam   / 2015 மே 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், சிலாபத்துறையிலுள்ள  வரலாற்றுச் சிறப்புமிக்க  டொரிக் மண்டபம் என அழைக்கப்படும்  அல்லிராணிக்கோட்டையை பாதுகாப்பதற்காக தற்போது தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிலாபத்துறை கடல் அலையின் தாக்கம் காரணமாக அல்லிராணிக்கோட்டை சேதமடையும் நிலையிலுள்ளது.
இந்தக் கோட்டையை  பாதுகாக்கும்  நோக்கில் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களமானது 60 மில்லியன் ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புக்களை அமைத்துவருகின்றது.

அரிப்பு கடலுக்கு அருகிலுள்ள கற்பாறையொன்றில்  மேல் செங்கற்களையும் சுண்ணாம்பையும் கொண்டு மிகவும் பாதுகாப்பாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை  நான்கு சிறிய அறைகளைக் கொண்ட  மாடியாக  காணப்படுவதுடன், இதன் மத்திய பகுதியிலுள்ள படிக்கட்டு ஊடாக மேல் மாடிக்கும் செல்லமுடியும். அத்துடன்,  மிகப்பெரிய சாப்பாட்டு அறையும் உறங்கும் அறையும் இதிலுள்ளன.

இந்த மாடிக்கட்டடத்துக்கு அருகில் இரு கட்டடங்கள் காணப்பட்டுள்ளன. அவை தற்போது முற்றாக சிதைவடைந்து அத்திவாரம் மட்டுமே எஞ்சியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .