Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 16 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக உபகரணப் பொருட்கள் வியாழக்கிழமை(14) வழங்கி வைக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வன்னி சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ந. கலைச்செல்வனிடம் ஊடக உபகரணங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
அதன் பின்னர் குறித்த ஊடகவியலாளர் சங்கத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் பிராந்திய ஊடகவியலாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கு மடிக்கணினி, புகைப்படக் கருவி என்பன வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் அரச அதிபராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகத்தின் வேண்டுகோளுக்கிணங்க லைக்கா மொபைல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் ஊடகவியளர்களுக்கு குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
9 hours ago