2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வட்டக்கச்சியில் நடைபெற்ற உளசமூக செயலமர்வு

Thipaan   / 2015 மே 16 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில், வட்டக்கச்சி இராணுவ முகாம், சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 60 பேருக்கான உளசமூக செயலமர்வு வட்டக்கச்சி இராணுவ சிவில் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வில், கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர் இ.செந்தூரன், மாவட்ட உளவள அதிகாரி தே.துஸ்யந்தன், சட்ட உதவி ஆணைக்குழு உத்தியோகத்தர் சட்டத்தரணி எஸ்.பிரசாந்தன் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது, குடும்பம் ஒன்றின் தேவைகள், நலன்கள், குடும்பத்திலுள்ளவர்களின் போஷாக்கை எவ்வாறு பேணுதல், அதிலும் குறிப்பாக பெண்களின் போஷாக்கை எவ்வாறு பேணுதல், சிறுவர் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாத்தல், அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுதல், மனித உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை மனித நலனுக்காக எவ்வாறு பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .