Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 16 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா, பேயாடிகூழாங்குளம் பொதுக்காணி கிராமத்தின் பொதுத்தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மக்களுக்கு மீள கையளிக்கப்படல் வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வவனியா பிரதேச செயலாளருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பேயாடிகூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுக்காணியானது தங்களால் குறிப்பிட்டவொரு பொது அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் எனக்கு முறையிட்டுள்ளனர்.
பழமையான இந்த கிராமத்தில் ஏற்கெனவே இராணுவத்தினரின் தேவைக்கு பெருமளவிலான காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மீள்குடியேறிவரும் மக்களுக்கான பொதுக்கட்டிடங்களை அமைப்பதற்கு காணப்படும் மேற்படி காணியானது குறிப்பிட்டவொரு அமைப்புக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள கிராமங்களிலேயே கல்வி கற்று வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்த பாடசாலை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அயற்கிராமத்தில் இயங்கி வருகின்றது.
இந்த நிலையில் இவர்களுக்கான பாலர்பாடசாலையோ, பொதுநோக்கு மண்டபமோ அமைப்பதற்கு பொதுக்காணி அவசியமாகும்.
இது தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்து நான் பேச்சு நடாத்தினேன். இரு பகுதியினருக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுதல் அவசியமாகும். குறிப்பிட்ட பொது அமைப்பின் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேறொரு இடத்தில் காணி வழங்க ஆவணசெய்யுமாறு அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
40 minute ago
47 minute ago