2025 ஜூலை 05, சனிக்கிழமை

தாதியர்கள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறகணிப்பு

George   / 2015 மே 21 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர்களை எதுவிதமான காரணமும் இன்றி இடமாற்றியமையை கணடித்து குறித்த வைத்தியசாலை தாதியர்கள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் ச.சுகிர்ந்தரராசா இன்று தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காமல் போனால் தொடர்ச்சியான பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய நான்கு சிஷே;ட தாதிய உத்தியோகத்தர்கள் எதுவிதமான காரணங்களுமின்றி, கடந்த 25ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதிலீடு எதுவும் இல்லாமல் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை, மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இருவர் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கும், மற்றும் இருவர் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

எமது வைத்தியசாலையில் 64 தாதியர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் ஐந்து பேர் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள். எனவே, தற்போது கடமைபுரியும் 60 தாதிய உத்தியோகத்தர்களில் ஒருவரே சிரேஸ்ட உத்தியோத்தராவார்.

எனவே, சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து பிராந்திய சுகாhதார பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம்.

எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியான பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .