2025 ஜூலை 05, சனிக்கிழமை

செய்தியாளர்கள் உட்பட நால்வர் கைது: விசாரணையின் பின்னர் விடுவிப்பு

Kogilavani   / 2015 மே 22 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் நேற்று புதன்கிழமை(21) இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தின்போது, புகைப்படம் எடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இருசெய்தியாளர்கள் உட்பட நால்வர் வவுனியா பொலிஸாரால் இருமணி நேர விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புங்குடுதீவு மாணவியின் கொலையை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வவுனியா, திருநாவல்குளம் பகுதியில் வீதிகளில் டயர்கள் போடப்பட்டு  தீயிடப்பட்டிருந்தது.

இதன்போது செய்தியாளர்கள் இருவரும் யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் இருவரும் கைதுசெய்யப்படடனர்.

பின்னர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று உரையாடியதன் பின்னர் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .