Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 22 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து மடு 'பூமலர்ந்தான்' கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கு தற்காலிக வீடமைப்பதற்கான கூரைத்தகரங்களை மன்னார் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தினால் நேற்று வியாழக்கிழமை (21) வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார், ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
லைக்கா மொபைல் நிறுவனத்தலைவரும் ஞானம் அறக்கட்டளையினுடைய ஸ்தாபகருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் பணிப்புரைக்கு அமைய லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மடு, பூமலந்தான் கிராமத்தில் ஏற்கெனவே மீளக்குடியமர்ந்த 100 குடும்பங்களுக்கு தற்காலிய வீடமைத்தலுக்கான கூரைத்தகரங்கள் வழங்கப்பட்ட நிலையில் மிகுதி 185 குடும்பங்களுக்கும் நேற்று தற்காலிக வீடமைத்தலுக்கான கூரைத்தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு சமூதாய அடிப்படையிலான ஒருங்கினைக்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, சிறப்பு விருந்தினராக மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி, லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் பணியாளர்கள் மற்றும் கிராம சேவகர் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கான கூரைத்தகரங்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
41 minute ago
3 hours ago
5 hours ago