2025 ஜூலை 05, சனிக்கிழமை

மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பு

Princiya Dixci   / 2015 மே 22 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யாழ். நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, மன்னார் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை (22) பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இன்று வழமை போல் இடம்பெற்ற போதும் நீதிமன்றம் சென்ற சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் இன்றைய வழக்கு விசாரணைகள் அனைத்தும் பிறிதொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து கடந்த புதன்கிழமை மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 129 பேரை பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்நிலையில் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இன்று வட மாகாணம் தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தல் வழங்கிய நிலையில் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .