Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 24 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் கமலநாதன் விஜிந்தன் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.
மேலும் யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையே இறுதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ். புங்குடுதீவு மாவணி வித்தியா கொலை செய்யப்பட்டுள்ளமையை எமது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஆயிரம் எண்ணங்களுடன் தனது உயர்தரக் கல்வியை தொடர்ந்த யாழ். மாணவி வித்தியா கொடூரமான முறையில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதுடன், அவரது எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவங்களில் மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற இந்த சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளை எந்த வகையிலும் இரக்கத்துடன் பார்க்கக் கூடாது.
இன்று வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இன, மத, பிரதேச பாகுபாடின்றி, வித்தியாவைப் போல இன்னொரு வித்தியா இவ்வாறு உயிரிழக்க கூடாது எனவும் அதற்காக எல்லோருக்கும் நல்ல பாடத்தை புகட்டும் வகையில் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய அனவருக்கும் கடுமையான தண்டணை வழங்கி எமது இளம் சமூகத்தினரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், பிள்ளைகளின் விடயங்களில் பெற்றோர்கள் எப்போதும் அக்கறையுடன், அவதானத்துடன் இருக்க வேண்டும். பிள்ளைகளை பெற்றதுடன் ஒரு பெற்றோர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. அவர்களை நல்ல முறையில் அவதானித்து வளர்த்தெடுப்பதும் பெற்றோர்களின் கட்டாயக் கடமையாகும்.
எனவே, மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும். இதனை காரணமாக வைத்து மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு சிலர் மறைமுகமாக செயற்படுவதாக அண்மைய நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கும் என்பது உண்மை. இந்த விடயத்தில் நாம் பொறுமையாக செயற்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago