2025 ஜூலை 05, சனிக்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கான தெளிவுப்படுத்தும் கூட்டம்

Sudharshini   / 2015 மே 24 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா கல்வி வலய தொண்டர் ஆசிரியர்களுக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுப்படுத்தும் கூட்டமொன்று கிண்ணியா கல்வி வலய தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.அனிஸ் தலைமையில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் சனிக்கிழமை (23) இடம்பெற்றது.

தொண்டர் ஆசிரியர்கள் பல இன்னல்களுக்கும் மத்தியில் கடந்த யுத்த காலத்திலும் சுனாமி காலத்திலும் எதுவித கொடுப்பனவுமின்றி கஷ;டப் பிரதேசங்களில் தொண்டர் ஆசிரியர்களாக கமமையாற்றினார்கள்.

ஆனால், இது வரை அவர்களின் பிரச்சினைகள் எந்த அரசியல் வாதிகளினாலும் தீர்க்கப்படவில்லை. ஆனால், தற்போது இவர்களது பிரச்சினையை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கொண்டு சென்ற போது எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். அத்துடன் தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

அந்தவகையில் திருகோணமலை மூதூர், ஈச்சிலம் பற்று, கொமரங்கட வெல, குச்சவெளி, புடைவைக்கட்டு ஆகிய பகுதிகளிலுள்ள அனைத்து தொண்டர் ஆசிரியர்களும் வரவழைக்கப்பட்டு பேரணியொன்றின் மூலம் மத்திய அரசு வரை கொண்டு சென்றோம்.

திருகோணலை மாவட்டத்தில் ஐந்து வலயங்களிலிருந்து சுமார் 300 தொண்டர் ஆசிரியர் விவரங்களை சேகரித்தோம். இந்த வகையில் கிண்ணியா கல்வி வலயத்தில் மாத்திரம் சுமார் 150 க்கும் மேற்ப்பட்ட தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்;.

ஏனைய வலயங்களுடன் பார்க்கின்றபோது கிண்ணியா வலயத்திற்கு குறைந்த எண்ணிக்கையான நியமனங்களே கிடைக்கும் சந்தர்ப்பம் உள்ளது.
கிண்ணியா  வலயத்தில் முள்ளிப் பொத்தானை, வான் எல , குறிஞ்சாக்கேணி போன்ற பகுதிகளிலிருந்து அதி கஷ;டமான பகுதிகளிலே கடமையாற்றி இருக்கின்றனர்.

எனவே, பாராபட்சமின்றி எல்லோருக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என நாங்கள் வழியுறுத்தி வருகின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .