2025 ஜூலை 05, சனிக்கிழமை

மன்-அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கட்டட திறப்பு விழா

Gavitha   / 2015 மே 25 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் கல்வி வலயத்துக்குட்பட்ட மன்-அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் (நவோதயா) பாடசாலையின் வகுப்பறைக் கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (24) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

மாணவர்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்த இந்த கட்டடத்தை புனர்நிர்மானம் செய்வது தொடர்பில், கடந்த ஆண்டு இப்பாடசாலை அதிபரினால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதற்கிணங்க, இக்கட்டடம் நாடாளுமன்ற  உறுப்பினரால் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பெருந்தொகை நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் தனது  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தார்.
பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச்சங்க உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .