2025 ஜூலை 05, சனிக்கிழமை

புங்குடுதீவு மாணவின் கொலையயை கண்டித்து கவனயிர்ப்பு போராட்டம்

Sudharshini   / 2015 மே 25 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று (25) யாழ். பல்கலைகழக வவுனியா வளாக மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் வித்தியாவின் கொலைக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் எனவும் அத்தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, பதாதைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .