Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 25 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உழவு வேலைக்காக உழவு இயந்திரத்தை சீர் செய்துகொண்டிருந்த போது, தன்னிச்சையாக உழவு இயந்திரம் இயங்கியதையடுத்து ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மற்றையவர் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று காலை(25) உழவு வேலைக்காக உழவு இயந்திரத்தில் கலப்பையை பொருத்திக்கொண்டிருந்த போது, உழவு இயந்திரம் திடீரென முன்னோக்கி செல்லத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உழவு இயந்திரத்துக்கு அருகில் அமர்ந்திருந்த 80 வயதான முதியவர், உழவு இயந்திரம் மோதி ஸ்தலத்திலேயே பலியானார்.
மேலும், உழவு இயந்திரத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட உழவு இயந்திர உரிமையளரான சி. செல்வரட்ணம் ஆபத்தான நிலையில் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago