2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2015 மே 28 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஏ - 9 வீதி மற்றும் பரந்தன் - முல்லைத்தீவு ஏ - 35; பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

ஏ - 9 வீதியின் திருமுறிகண்டி முதல் உமையாள்புரம் வரைக்குமான பகுதிகளிலும் பரந்தன் - முல்லைத்தீவு ஏ - 35 வீதியின் பரந்தன் முதல் புதுக்குடியிருப்பு வரையான பகுதிகளிலும் தினமும் இரவு வேளைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த 20ஆம் திகதி திருமுறிகண்டியை அண்மித்த ஏ - 9 வீதியில் வாகனத்தில் மோதுண்டு மூன்று மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், ஏ - 35 வீதியில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோதி இரு இளைஞர்கள் காயமடைந்தனர்.

கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை கட்டாக்காலிகளாக திரிய விடாமல் இரவு வேளைகளில் பட்டிகளில் கட்டி பராமரிக்க வேண்டும் எனவும் அவ்வாறு தவறின் கால்நடைகள் பிடிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .